ஜார்க்கண்ட் சறுக்கி விழுந்த பாஜக... சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திய எதிர்க்கட்சிகள்!


வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்ட கையோடு, காஷ்மீரில் 370-வது சட்டக்கூறு ரத்து, ராமர் கோயில், என்ஆர்சி, குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்று அடுத்தடுத்து அதிர வைத்துக்கொண்டிருக்கும் பாஜக, அவற்றின் மூலம் தேர்தல் வெற்றிகளைப் பெறலாம் என்று போட்டுவைத்திருக்கும் கணக்குகள் தகர்ந்துவருகின்றன. அதன் அண்மை உதாரணம்தான் ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு.

சுருங்கிப்போன ஆதரவுத் தளம்

மக்களவைத் தேர்தலில், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கத்துடன் (ஏ.ஜே.எஸ்.யூ) கூட்டணி அமைத்து 12 இடங்களில் வென்றது பாஜக. இந்தத் தேர்தலில் தனித்துக் களம் கண்ட பாஜவுக்கு, மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 25 இடங்களே கிடைத்திருக்கின்றன. என்ன காரணம்?

x