இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே எதிரான சட்டம்!- திகில் கிளப்பும் திருமாவளவன்


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு  எதிராகத் தொடர்ந்து, தீவிரமாக குரல்கொடுத்து வருபவர் விசிக தலைவர் தொல்.திருமாவளவன். திமுக நடத்திய பேரணியில் கண்டன பேனரை தலைக்கு மேல் உயர்த்திப்பிடித்தபடி அவர் நடந்துசென்ற படத்தை சமூக வலைதளங்களில் இஸ்லாமியர்கள் நெகிழ்ச்சியோடு பகிர்ந்திருந்தார்கள். இந்தத் தளத்தில் அடுத்தடுத்து போராட்டங்களை நடத்தி
வரும் அவருடன் ஒரு பேட்டி.

திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிப் பேரணியில் பங்கேற்ற அனுபவம் எப்படியிருந்தது?

திமுக தோழமைக்கட்சிகள் மற்றும் கட்சி சாராத ஜனநாயக சக்திகள் பங்கேற்ற அந்த மாபெரும் பேரணியில் குறைந்தபட்சம் 1 லட்சம் பேர் பங்கேற்றனர் என்பது என் கணிப்பு. வன்முறை வெடிக்கும் என்று பாஜக, அதிமுக போன்ற ஆளுங்கட்சிகளால் திட்டமிட்டு வதந்தி பரப்பப்பட்டது. ஆனால், எந்தச் சிறு அசம்பாவிதமும் நடக்காமல், அவ்வளவு பெரிய பேரணி கட்டுப்பாடாக அமைதியாக நடந்தேறியது. கொடி, பேனர் என்று ஒவ்வொருவரும் அவரவர் அடையாளங்களுடன் வந்திருந்தாலும்கூட, ஒற்றைக்குரலாய் ஒருமித்த குரலாய், பாஜகவுக்கு எதிரான குரலாய் அந்தப் பேரணியும், முழக்கங்களும் அமைந்திருந்தன. தமிழகத்தில் மதச்சார்பற்ற சக்திகள் வலுவாய் இருக்கின்றோம் என்பதை உறுதிப்படுத்துகிற பேரணியாக அது அமைந்தது, மிகப்பெரிய நம்பிக்கையையும், மன நிறைவையும் தந்தது.

x