இனி பேசி  என்னாகப் போகுது?- ஒரு தூக்கு தண்டனை கைதியின் வீடு!


கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

ஹைதராபாத் என்கவுன்ட்டருக்குப் பிறகு என்கவுன்ட்டர் மற்றும் மரண தண்டனைக்கு ஆதரவான குரல்கள் அதிகரித்திருக்கின்றன. ‘தாமதமாகக் கிடைக்கும் நீதியும் அநீதியே. உடனுக்குடன் கொடுக்கப்படும் தண்டனையே சரியானது’ என்று ஆளுக்காள் அறச்சீற்றம் காட்டுகிறார்கள். 

அதேபோல், கொடுங்குற்றவாளிக்குத் தூக்கு தண்டனை என்ற செய்திகள் வருகையில், ‘இன்னமுமா அவனுகளைத் தூக்குல போடாம 
இருக்காங்க?’ என்று கொந்தளிக்கிறார்கள்.

இந்த இரண்டுமற்ற வெளியில் நிற்பவையே தூக்கு தண்டனைக் கைதிகளின் குடும்பங்களின் குரல்கள். அப்படியான குரல்களில்தான் எப்படியான வெறுமை, வறட்சி, விரக்தி! 2010-ல், கோவை சிறுவன், சிறுமி கடத்தல், கொலை வழக்கில் தூக்கு தண்டனைக்குக் காத்திருக்கும் மனோகரனின் வீட்டிற்குச் சென்றபோது இதையெல்லாம் உணர முடிந்தது.

x