லதா ரகுநாதன்
lrassociates@gmail.com
அடிக்கடி பயணம் செல்பவர்கள் எப்போதும் சந்திக்கும் பிரச்சினை துணி துவைப்பதுதான். தங்கும் இடங்களில் துணி துவைக்க வசதி இருக்குமோ இருக்காதோ என்ற சந்தேகத்தில் கூடுதலாக ஆடைகளைச் சுமந்து செல்வார்கள். வீட்டில் என்றால் அந்த வேலையை வாஷிங் மெஷின் பார்த்துக்கொள்ளும். அதற்காக, பயணங்களின்போது வாஷிங் மெஷினைச் சுமந்துசெல்லவா முடியும்? கையடக்க அளவில் வாஷிங் மெஷின் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கிறீர்களா? அப்படி ஒரு கருவி சந்தைக்கே வந்துவிட்டது. அதுதான் டால்ஃபி (Dolfi).
இதை பாக்கெட் சைஸ் வாஷிங் மெஷின் என்று அழைக்கிறார்கள். ஆம், பார்க்க சோப்பு டப்பா வடிவில்தான் இருக்கிறது இந்தக் கருவி.
எப்படிப் பயன்படுத்துவது?