பல்பு வாங்கும் தமிழக பாஜக!


தமிழிசை தமிழகத்தில் இருந்தவரை “தாமரை மலர்ந்தே தீரும்” என்று முழங்கிக் கொண்டே இருந்தார். ஆனால், எச்.ராஜா உள்ளிட்டவர்களை வைத்துக் கொண்டு அது எப்படி சாத்தியமாகும் என்கிறார்கள் நெட்டிசன்கள். குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு  எதிராக எதிர்க்கட்சிகள் போராடிக் கொண்டிருந்த சமயத்தில் ஆதரவாகப் போராட்டம் நடத்துகிறோம் என்று கிளம்பியது தமிழக பாஜக. இது இணையத்தில் வெகுவாக கலாய்க்கப்பட்டது. இந்நிலையில் எச். ராஜா வழக்கம்போல், “எதிர் கருத்து சொல்பவர்கள் தேசத் துரோகிகள்” என்று ட்வீட் போட்டு சர்ச்சையில் சிக்கினார். பின்னர் அதை அவரே டெலிட் செய்தாலும் மீம் கிரியேட்டர்களும் வலைப்பதிவர்களும் ராஜாவை விடவில்லை.  போதாக்குறைக்கு ப. சிதம்பரத்தையும் வம்புக்கு இழுத்து வைரலானார் ராஜா.  “இப்படியெல்லாம் இருந்தால் எப்படிங்க தாமரை மலரும்?” என்கிறார்கள் நெட்டிசன்கள்.

சுற்றுலாத் துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது!- முதல்வர் பழனிசாமி

இதனால கைலாசா நாட்டு சுற்றுலாத் துறைக்கு பாதிப்பு ஏதும் இல்லையே?!- விக்கி

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் தேசத் துரோகிகள்!- எச்.ராஜா

x