ஸ்டாலினுக்கு இல்லாவிட்டாலும் திமுகவுக்கு அந்தத் தகுதி இருக்கிறது!- கொளத்தூர் மணி பேட்டி


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

மும்முறை தேசப்பாதுகாப்பு சட்டத்திலும், இருமுறை தடா சட்டத்திலும் கைது செய்யப்பட்டவர் திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் உச்சத்தில் இருந்தபோது மதுரைக்கு வந்த அவரை நேரில் சந்தித்தேன்.

எப்படியிருக்கிறது இன்றைய அதிமுக ஆட்சி?

ஜெயலலிதா அவர்கள் மீது நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் மாநில உரிமைகள் என்று வருகிறபோது, அவர் மத்திய அரசுக்கு எதிராக உறுதியாக நின்றிருக்கிறார்.ஆனால் இவர்களோ, மத்திய அரசு எள் என்றால் எண்ணெய்யோடு நிற்கிறார்கள். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதே, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய விதியைத் திருத்தி தமிழ் தெரியாத இந்தியர்களும், நேபாளம், பூட்டானைச் சேர்ந்தவர்களும் அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று திருத்தத்தைக் கொண்டுவந்தார்கள். அன்று முதல் தொடர்ச்சியாக மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும். தன் ஆட்சியை நிலை நிறுத்திக்கொண்டதும், அரசியலில் தன்னை ஓரளவுக்கு வெளிப்படுத்திக் கொண்டதும்தான் எடப்பாடி பழனிசாமியின் ஒரே சாதனை.

x