இசையாலே நான்... வசமாகினேன்!- நெகிழும் அருணா சாய்ராம்


பிரேமா நாராயணன்
premaa.narayanan@gmail.com

நூற்றுக்கணக்கில் பாடல்கள்… ஆயிரக்கணக்கில் மேடைகள்... லட்சக்கணக்கில் ரசிகர்கள்... ‘கலைமாமணி’, ‘பத்மஸ்ரீ’, ‘சங்கீத சூடாமணி’, ‘சங்கீத கலாநிதி’, ‘இசைப் பேரறிஞர்’, அமெரிக்காவின் ‘அவார்ட் ஆஃப் எக்சலன்ஸ்’ என்று நீளும் விருதுப் பட்டியல்… இத்தனை பெருமைகள் இருந்தும் குரலில் அவ்வளவு அடக்கம், பணிவு, நீண்ட நாள் பழகியவர் போலப் பேசும் இனிய சுபாவம், வற்றாத மனிதநேயம்… இதுதான் அருணா சாய்ராம்!

பிஸியான பாடகியான அருணா சாய்ராமை அத்தனை எளிதாகப் பிடிக்க முடியாது. அதுவும் டிசம்பர் சங்கீத சீஸன் என்றால் கேட்கவே வேண்டாம். ஆனாலும் நமக்காக நேரம் ஒதுக்கி, நிதானமாக, ஆழமாகப் பேசினார்.

“என் தகப்பனார் சேதுராமனுக்குப் பூர்விகம் திருவாரூர் பக்கம். தாயார் ராஜலெட்சுமிக்குத் திருச்சி பக்கத்துல சிறுகமணி கிராமம். அப்பாவுக்கு மும்பையில வேலை. அதனால, கல்யாணம் ஆனதுமே அங்கே குடித்தனம். நான் வளர்ந்தது எல்லாமே மும்பையிலதான். வருஷத்துக்கு ஒரு முறை தாத்தா, பாட்டியைப் பார்க்க கிராமத்துக்கு வந்து போனதால நம்ம பழக்கவழக்கம், கலாச்சாரம் எதுவும் விட்டுப் போகலை. எனக்கு நாலு, அஞ்சு வயசு இருக்கும்போதே மும்பையிலேயே என்னைத் தமிழ் வகுப்புக்கு அனுப்பினாங்க. அதனால தமிழ் மீதான நாட்டமும் குறையலை.

x