பாலினப் பாகுபாட்டிலிருந்து எப்போது விடுதலை?


உமா
uma2015scert@gmail.com

நம் சமூகத்தின் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டே பெரும்பாலும் பணிபுரியும் இடங்களிலும் பாலினப் பாகுபாடுகள் நிறைந்து கிடக்கின்றன. இவை பள்ளிகளுக்கும் பொருந்தும். பெரும்பாலான பள்ளிகளில் பணியாற்றும் பெண் ஆசிரியர்களிடம் கேட்டால் பள்ளிகளில் ஆண் ஆசிரியர்களால் தங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை கதை கதையாகச் சொல்கிறார்கள். இவற்றுள் மாறுபட்ட பள்ளிகளும் உண்டு. சில இடங்களில் பெண் ஆசிரியர்கள் ஆண் ஆசிரியர்களது மன உளைச்சலுக்குக் காரணமாக அமைந்து விடுவதும் நடக்கிறது. ஆனாலும், அளவீட்டில் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

சகோதரத்துவம் நிறைந்த பள்ளிகள்

எத்தனையோ ஆண் ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பெண்கள் தலைமை ஆசிரியராக இருந்தால் உடன் பிறந்த சகோதரத்துவத்துடன் ஒத்துழைப்புத் தருகிறார்கள். அலுவலகம் சார்ந்த பணிகளுக்கு அடிக்கடி வெளியில் செல்வது தொடங்கி அனைத்து விஷயத்திலும் பெண் ஆசிரியர்களுக்கு அனுசரணையாக இருக்கிறார்கள். பள்ளிகளில் ஒரு குடும்பம் போல பழகி மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தலில் உதவி செய்வதில் ஆரம்பித்து கட்டமைப்பு, பெற்றோர் தரப்பு என எல்லா நிலைகளிலும் உதவும் ஆண் ஆசிரியர்களும் உண்டு.

x