கரு.முத்து
muthu.k@kamadenu.in
உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் பிளாஸ்டிக் அரக்கனுக்கு முடிவுகட்ட முடியும் என்று ஆக்கபூர்வமாகச் செயல்படுத்திக் காட்டியிருக்கிறார் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த காஜா மொய்னுதீன்.
மனிதர்களின் ஆரோக்கியத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை விளைவிக்கும் மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்சிக்கு உட்படுத்தி, அதிலிருந்து மாற்றுப் பொருட்களைத் தயாரிக்க முடியும் என்று காட்டியிருக்கும் இவர், ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பது இன்னும் சிறப்பு.
பிளாஸ்டிக் குறித்த தொழில்நுட்பங்களை அனுபவப் பாடங்கள் மூலமே அறிந்துகொண்டவரான இவர், மக்காத பிளாஸ்டிக் பொருட்களிலிருந்து ‘பைரோ ஆயில்’ என்னும் திரவ எரிபொருளையும், நிலக்கரி போன்ற திட எரிபொருளையும் தயாரிக்கும் முறையைக் கண்டறிந்திருக்கிறார்.