படத்தை இன்னொரு தடவை போடச்சொல்லுங்க அக்கா!- எம்எல்ஏ சந்திரபிரியங்காவின் சபாஷ் முயற்சி


கரு.முத்து
muthu.k@kamadenu.in

‘ரெளத்திரம் பழகு’ என்று கரும்பலகையில் எழுதப்பட்ட வாசகத்துடன் தொடங்குகிறது அந்தக் குறும்படம். வீட்டில் பெயின்டிங் வேலை பார்க்க வந்திருப்பவருக்குத் தண்ணீர் கொடுக்கச் செல்லும் சிறுமி, மைதானத்தில் பயிற்சியாளரிடம் கால்பந்து கற்றுக் கொள்ளும் சிறுமி, முதல் நாள் பள்ளிக்கு வராததால் கண்டிக்கும் ஆசிரியர் முன் நடுங்கியபடி நிற்கும் சிறுமி… என்று திரையில் விரிகின்றன காட்சிகள். சபலம் நிறைந்த ஆண்களால் அந்தத் தளிர்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாவதை அடுத்தடுத்த காட்சிகளில் காட்டும்போது பதைபதைப்பாக இருக்கிறது.

நம்மைப் பதைபதைக்க மட்டும் வைக்காமல், பாலியல் சீண்டல்களைத் தவிர்ப்பது எப்படி என்று குழந்தைகளுக்குப் புரியும் மொழியில் பாடமும் எடுக்கிறது இந்தக் குறும்படம். இந்தப் படத்தைத் தனது சொந்த முயற்சியில் உருவாக்கியிருப்பவர் புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரியங்கா. மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அந்தக் கொடூரச் செயலில் ஈடுபடும் ஆண்களின் மனதில் குற்றவுணர்வை ஏற்படுத்தும் தலைமை ஆசிரியையாக இந்தப் படத்தில் நடித்தும் இருக்கிறார்  சந்திரபிரியங்கா.

குழந்தைகள் தின விழாவில் வெளியிடப்பட்டு அரசு அதிகாரிகள், குழந்தைகள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் என்று எல்லா தரப்பினரின் பாராட்டையும் பெற்றுவருகிறது இப்படம்.

x