என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in
எழுத்தாளர் பொன்னீலனின் 80-வது பிறந்தநாள் விழா சமீபத்தில் நாகர்கோவிலில் நடந்தது. அதில் பங்கேற்றுப் பேசியவர்களின் உரைகளில் பார்வையாளர்கள் மூழ்கியிருக்க, ஒருவர் மட்டும் மேடையைப் பார்ப்பதும், காகிதத்தில் ஏதோ கிறுக்குவதுமாக இருந்தார்.
சற்று நேரத்தில் மேடையேறிய அவரது கைகளில் இருந்த காகிதத்தில், பொன்னீலனின் உருவம் அத்தனை நேர்த்தியாக உருப்பெற்
றிருந்தது. அதைப் பொன்னீலனிடம் காட்டி கையெழுத்து வாங்கிக்கொண்டு கீழிறங்கியவரின் பெயர் வை.கோபாலகிருஷ்ணன். குமரி மாவட்டம், கொட்டாரத்தைச் சேர்ந்தவர்.
ஒருவரின் உருவத்தை ஓரிரு நிமிடங்களில் தத்ரூபமாக வரைந்து பிரமிக்க வைக்கும் கோபாலகிருஷ்ணன், இந்த முயற்சிக்
கெனத் தமிழகம் முழுவதும் பயணிக்கிறார். கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு
பெற்ற இவர், தன்னுடைய தூரிகையால் இலக்கியமும் வளர்க்கிறார். நல்லாசிரியர் விருது பெற்ற இவர், வளரும் தலைமுறைக்கு வாசிப்பைத் தூண்டவே இப்படியான முயற்சியில் இறங்கியிருக்கிறார் என்பதுதான் இன்னும் விசேஷம்!