தொகுப்பு: தேவா
தனது படம் ரிலீஸ் சமயத்தில் மட்டும் பேட்டி கொடுத்து அரசியல் செய்துவந்த ரஜினிக்கு, இப்போதெல்லாம் அடிக்கடி அரசியல் பேசும் வாய்ப்புக் கிடைக்கிறது. கே.பாலசந்தர் சிலை திறப்பு, கமல் 60, கோல்டன் ஜூப்ளி ஐகான் விருது விழா இப்படிக் கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்திக்கொண்டு டிரெண்டாகி விடுகிறார். அப்படித்தான் “எடப்பாடி முதல்வரானது ஒரு அதிசயம், அதுபோன்ற அதிசயம் இனியும் நடக்கும்” என்று கமல் 60 விழாவில் ரஜினி பூடகமாகப் பேசியது இணையத்தில் வைரலானது. தொடர்ந்து, “மக்கள் நலனுக்காக நானும் கமலும் இணைய வேண்டியிருந்தால் இணைவோம்” என்று அவர் கூறியதும் தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது!
ரஜினியும் கமலும் இணைந்தால் கமல்தான் முதல்வர் வேட்பாளர்!- ஸ்ரீப்ரியா
கல்யாணமே நடக்கலையாம். பொறக்கப் போற பிள்ளைக்கு வேலாயுதம்னு பேரு வெச்சானாம் வேலையத்தவன். - பச்சை பெருமாள்
எனது பேச்சு குறித்த ஓபிஎஸ்ஸின் கருத்து அவரின் சொந்த கருத்து. - ரஜினிகாந்த்
ஆமா... இது தமிழிசையோட டயலாக் ஆச்சே..?!- மாஸ்டர்