தர்பாருக்குத் தயாராகும் தலைவன்!
ஜெயலலிதா இருக்கும் போதே, ‘சின்ன எம்ஜிஆர்’ என தன்னைத் தானே பிரகடனம் செய்து கொண்டவர் வி.என்.சுதாகரன். ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனான இவரும் இப்போது ஊழல் வழக்கில் சிறையில் இருக்கிறார். இந்த நிலையில், ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு தாங்கள் தான் வாரிசு என அவரது அண்ணன் பிள்ளைகள் உரிமை கொண்டாடி வருகிறார்கள். இது தொடர்பாக இதுவரை மூச்சுவிடாமல் இருந்த சுதாகரன், “யார் யாரோ ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு உரிமை கொண்டாடும்போது அவரால் சுவீகாரம் எடுக்கப்பட்ட நான் ஏன் சும்மா இருக்க வேண்டும்? ஜெயலலிதாவின் வாரிசாக அங்கீகரிப்படுவதற்கு சட்டத்தில் இடமிருக்கிறதா என்று பாருங்கள்” எனத் தனது வழக்கறிஞர்களைத் தட்டி எழுப்பி விட்டிருக்கிறாராம். தண்டனைக் காலம் முடிந்து தலைவன் வெளியில் வரும்போது தன் பங்குக்கும் தர்பார் நடத்துவார் போல் தெரிகிறது.
புகழேந்தியைப் பாதுகாக்க ஓடிவந்த ஐஜி!
எடப்பாடியார் அறிவுறுத்தல்படி தமிழகம் முழுவதும் அமமுக அதிருப்தியாளர்களை ஒன்று திரட்ட முயன்று வரும் பெங்க
ளூரு புகழேந்தி கடந்த 17-ம் தேதி தஞ்சையிலும் வந்து கூட்டம் போட்டார். இங்குதான், “அமமுக இன்று முதல் கலைக்கப்பட்டது” என அதிரடி கிளப்பினார் புகழேந்தி. இதைக் கேள்விப்பட்டு தனது ஆதரவாளர்களைத் திரட்டிக்கொண்டுகூட்டம் நடந்த அரங்க வளாகத்தை முற்றுகையிட வந்தார் தஞ்சை மாநகர்மாவட்ட அமமுக செயலாளரும் தினகரனின் உறவினருமான ராஜேஷ்
வரன். இதையடுத்து உடனடியாக போலீஸுக்குத் தகவல் பறக்க, மத்திய மண்டல ஐஜியே ஸ்பாட்டுக்கு வந்து எதிர்ப்பு
கோஷ்டியை அப்புறப்படுத்தி புகழேந்தியைப் பாதுகாத்தாராம்.