நாங்கள்லாம் அப்பவே அப்படி!- மாணவப் பருவத்தில் மாண்புமிகு அமைச்சர்கள்


கே.சோபியா
readers@kamadenu.in

வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த ‘தெர்மோகோல் சம்பவம்’ நிகழ்ந்தபோது, இந்திய எல்லையைத் தாண்டி சீன ஊடகங்களும் அந்தச் செய்தியைப் பதிவு செய்திருந்தன. ``அண்ணன் செல்லூர் ராஜூ எங்கே படித்தார்... என்ன படித்தார்?'' என்று அறிந்து கொள்வதற்காக கூகுளை முற்றுகையிட்டது இளைஞர் பட்டாளம். அத்தகைய பெருமைக்குரிய அமைச்சர் பெருந்தகை செல்லூர் ராஜூ, அவர் படித்த மதுரை தியாகராசர் கல்லூரிக்கே வருகிறார் என்று தகவல் அறிந்ததும் முன்னமே ஆஜராகிவிட்டேன்.

கல்லூரிக்குள் நுழைந்தவுடன் ஒரு குழந்தையைப் போல ஓடோடிப்போய் கல்லூரியைச் சுற்றிப் பார்த்த அமைச்சர், விழா நடந்த டாக்டர் ராதா தியாகராசன் கலையரங்கத்தருகே போனதும் திகைத்து நின்றுவிட்டார். ``நான் தங்கிப்படிச்ச ஹாஸ்டல் இங்க தானே இருந்தது, அது எங்கய்யா..?'' என்று அவர் கேட்க, ``அதை இடித்துத்தான் இந்த அரங்கம் கட்டியிருக்கிறோம் சார்'' என்றார்கள் கல்லூரி நிர்வாகிகள்.

தமிழிசைப் பேரகராதி வெளியீட்டு விழாவின் நாயகர், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தான் என்றாலும், அங்கே மாப்பிள்ளை போல் ஜொலித்தவர்கள் அமைச்சர்கள் செல்லூராரும், ஆர்.பி.உதயகுமாரும்தான். காரணம், அவர்கள் இருவரும் அக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள்.

x