சம்பாதிச்சா மட்டும் போதாது... அதை அனுபவிக்கவும் தெரியணும்!- உலகம் சுற்றும் சாயாக் கடைக்காரர்


நீது
readers@kamadenu.in

பணம் சேர்ப்பதையே லட்சியம் என்று சதா சர்வகாலமும் உழைத்துக் களைக்கும் பலருக்கு மத்தியில், உழைத்தது போதும் என்று சொல்லி ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வெளிநாடுகளுக்குப் பறந்துவிடுகிறார் எர்ணாகுளத்தைச் சேர்ந்த விஜயன். இத்தனைக்கும் இவர் ஒன்றும் பெரிய தொழிலதிபர் அல்ல. டீக்கடைக்காரர்!

‘புதிய இடங்களைப் பார்ப்பதற்காகவே இந்த வாழ்க்கை’ எனும் குறிக்கோளுடன் வெவ்வேறு நாடுகளுக்கு விசிட் அடித்துக்
கொண்டிருக்கும் விஜயனை, எர்ணாகுளம் காந்திநகரில் அவர் நடத்தும் பாலாஜி காபி ஹவுஸில் சந்திக்கச் சென்றபோது, கடை
யில் பல நாடுகளின் நேரத்தைக் காட்டும் கடிகாரங்கள் என்னை வரவேற்றன.

ஆழப்புழை மாவட்டத்தின் சேர்த்தலாதான் விஜயனின் பூர்வீகம். எர்ணாகுளத்துக்குத் தொழில் நிமித்தமாக இடம்பெயர்ந்து 44 ஆண்டுகள் ஆகின்றன. சைக்கிளில் கேன் வைத்து டீ விற்பதில் இருந்து வாழ்க்கையைத் தொடங்கியவர் இன்றைக்கு இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறார். தனது அத்தனை பயணங்களிலும், தன் மனைவி மோகனாவைத் தவறாமல் அழைத்துச் சென்றுவிடுகிறார். “நான் கஷ்டப்பட்ட காலத்துல இருந்தே என் வாழ்க்கைப் பயணத்துல துணையா இருக்கிற மனைவிக்குச் செய்ற மரியாதை இது” என்கிறார் விஜயன்.

x