புல்லட் பூவையர்கள்!- பெண்களுக்கு ‘பைக்’ ஓட்டக் கற்றுத்தரும் சோனியா


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

“ஸ்கூட்டர் விளம்பரங்கள்ல அழகான பொண்ணுங்க ஸ்கூட்டர் ஓட்டுற மாதிரிதான் காட்டுறாங்க. பைக் விளம்பரம்னா ஆம்பளைங்க ஓட்டுற மாதிரி காட்டுறாங்க. பொண்ணுங்கன்னாலே கியர் இல்லாத ஸ்கூட்டரைத்தான் ஓட்டணுமா... இதுலயும் சமத்துவம் இருக்கணும் இல்லையா?” என்று அழுத்தம் திருத்தமாக கேட்கிறார் சோனியா.

கொச்சினில் பெண்களுக்கு பைக் ஓட்டச் சொல்லிக்கொடுக்கும் பணியில் மும்முரமாக இருக்கிறார் இந்த சாகச மங்கை. அதுவும் சாதாரண பைக் அல்ல – தடதடக்கும் புல்லட் பைக்!

“எனக்குப் பூர்விகமே கொச்சின்தான். என்னோட அப்பா கிரேஸியஸ் நகைக் கடை நடத்திட்டு இருந்தார். வீட்ல நானும், அண்ணனும்தான். எனக்குச் சின்ன வயசுல இருந்தே சாகச உணர்வு அதிகம். யார் துணையும் இல்லாம நானே சைக்கிள் ஓட்டக் கத்துக்கிட்டேன். எனக்குப் பத்து வயசு இருக்கும்போது அப்பா ஸ்கூட்டர் ஓட்டக் கத்துக்கொடுத்தார். அப்போ கைனடிக் ஹோண்டாதான் ஓட்டினேன். எனக்குக் கால்கூட தரையில எட்டாத பருவம் அது. நான் ஸ்கூட்டர்ல ஏறி உட்கார்ந்ததும், அப்பா ஸ்டார்ட் பண்ணித் தருவார். ஆனா, ஸ்கூட்டரை நிறுத்தும்போது அப்பா கூட இருக்கமாட்டார் இல்லையா? அதனால, நான் பிரேக்கை இறுக்கமா பிடிச்சுகிட்டு வண்டியில இருந்து குதிச்சு வண்டி கூடவே ஓடிப்போய்தான் நிப்பாட்டுவேன்.

x