தீபாவளி கவனிப்பு எல்லாத்தையும் சாய்ச்சுப்புடுச்சி!- தங்கதமிழ்ச்செல்வன் தமாஷ் பேட்டி


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த வரைக்கும் ஊடகங்களில் தினந்தினம் சரவெடி கொளுத்திய தங்கதமிழ்ச்செல்வன் இப்போது கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார் போலும். திமுகவுக்கு ஜாகை மாறிய பிறகு அவர் முதன் முதலில் தேர்தல் பணியாற்றிய நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுகவுக்குத் தோல்வியே கிடைத்திருக்கிறது. அண்ணனுக்கு ஒரு போன் போட்டு நலம் விசாரிப்போமே என்று முயன்றேன். அதே நக்கல் நையாண்டியோடு பதில் தந்தார்.

கடைசி வரைக்கும் நமக்கு எடப்பாடியார் தான் முதலமைச்சரா?

இந்த இடைத்தேர்தல் முடிவுகள மட்டும் வெச்சிப்புட்டு, அடுத்து அதிமுக ஆட்சிதான்னு சொல்றதெல்லாம் சும்மா. வரிசைக்கா 38 நாடாளுமன்றத் தொகுதி, 13 சட்டமன்றத் தொகுதியில தோத்தவங்க, ரெண்டு தொகுதியில மட்டும் தீபாவளி கவனிப்பு கவனிச்சி ஜெயிச்சிப்புட்டு, ஜெயிச்சிட்டோம், ஜெயிச்சிட்டோம்னு சொன்னா மக்கள் எப்டி ஏத்துப்பாங்க.

x