யோகி பாபு மாதிரி எனக்குள்ளும் வலிகள் இருக்கு!- ‘டாணா’ இயக்குநர் யுவராஜ் சுப்ரமணி


க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

“உதவி இயக்குநரா இருக்கிற எல்லாருக்கும் வெற்றி எல்லாம் ரெண்டாம்பட்சம்தான். அவங்களோட ஏக்கமெல்லாம் ‘முதல் வாய்ப்பு’ங்கிற அங்கீகாரம் மட்டும்தான். என்னோட 45-வது வயசுலதான் எனக்கு இந்த அங்கீகாரம் கிடைச்சிருக்கு” - அழுத்தமாய் ஆரம்பிக்கிறார் யுவராஜ் சுப்ரமணி. செல்வராகவனிடம் உதவி இயக்குநராக இருந்த யுவராஜ், தனது முதல் படமான ‘டாணா’ பற்றியும், திரையுலகில் தனது போராட்டங்கள் பற்றியும் மனம் திறக்கிறார்.

‘டாணா’ பெயரே வித்தியாசமா இருக்கே?

இந்தியில் போலீஸ்காரர்களை ‘தானேதார்’னு சொல்லுவாங்க. அதுவே காலப்போக்குல மருவி வேலூர் வட்டாரத் தமிழ்ல `டாணாக்காரர்கள்'னு மாறிடுச்சு. ஊர் எல்லையில இருக்கிற காவல் தெய்வங்களைக் கவனிச்சுப் பாத்தீங்கன்னா பெரும்பாலும் 
காக்கிச் சட்டை போட்ட ஒரு போலீஸ்காரர் சிலையும் இருக்கும். அந்த ஊர்ல வீரதீரமா இருந்த போலீஸ்காரரைத் தெய்வமா மதிச்சு இப்படிச் சிலை வைக்கிறது வழக்கம். ஒரு முறை வேலூர் தாண்டி போயிட்டு இருக்கும்போது அப்படி ஒரு சிலையைப் பார்த்தேன். அதை வச்சு யோசிக்க ஆரம்பிச்சதுதான் இந்தக் கதை.

x