அழைப்பிதழ் இல்லாமல் ஒரு திருமணம்!-  ஆடம்பரங்களைத் தவிர்த்த காதல் ஜோடி


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

‘காகிதப் பயன்பாட்டைக் குறையுங்கள்... பிளாஸ்டிக் பொருட்களுக்கு விடைகொடுங்கள்’ என்று அரசு அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறது. இதை யார் கேட்கிறார்களோ இல்லையோ, திருச்சூரின் ஜான்பியஸ் – ரின்சி ஜோடி அக்கறையுடன் நடைமுறைப்படுத்தி அசத்தியிருக்கிறது. ஆம், அண்மையில் காதல் திருமணம் செய்த இந்த ஜோடி, அநாவசிய சம்பிரதாயங்கள், பிளாஸ்டிக் பொருட்களுக்கெல்லாம் விடைகொடுத்துவிட்டு வித்தியாசத் திருமணம் நடத்தியிருக்கிறது.

திருச்சூரைச் சேர்ந்த ஜான்பியஸ், ஒரு குறும்பட இயக்குநர். சூழலியல் ஆர்வலரும்கூட. ஒரு அழகிய தருணத்தில் ரின்சியின் அறிமுகம் கிடைத்தது. நண்பர்களாகப் பழகிய இருவரும் பின்னர் காதலில் விழுந்தனர். இரு வீட்டாரும் இன்முகத்துடன் அதை அங்கீகரிக்க, திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அப்போதுதான், எளிமையான திருமணமாக அது இருக்க வேண்டும் எனும் தன் விருப்பத்தை வெளியிட்டார் ஜான்பியஸ். அதற்கான ஆக்கபூர்வ யோசனைகளையும் முன்வைத்தார். இரு வீட்டாரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள இனிதே நடந்தேறியிருக்கிறது திருமணம்.

புதுமைச் சிந்தனை கொண்ட புதுமணத் தம்பதி ஜான்பியஸ் – ரின்சியைத் திருச்சூரில் அவர்களது இல்லத்தில் சந்தித்தேன். புன்னகையுடன் பேசத் தொடங்குகிறார் ஜான்பியஸ்.

x