தேர்வு ஒன்றே போதுமா? - கல்வியின் குறிக்கோள் விசாலமாக இருக்க வேண்டும்


உமா
uma2015scert@gmail.com

சமீபத்தில் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்திகளில் முதன்மையானது, நீட் தேர்வில் நடந்த மோசடி குறித்ததுதான். இதுவரை இல்லாத அளவுக்குக் கெடுபிடிகளுடன் நடந்துவரும் இந்த நுழைவுத் தேர்வுகளிலேயே முறைகேடுகள் நடந்திருக்கின்றன என்பதுதான் இந்த அதிர்ச்சிக்கு முக்கியக் காரணம்.

மருத்துவக் கனவு தகர்ந்த விரக்தியில் பலியான அனிதா போன்ற மாணவர்கள் ஒருபக்கம் என்றால், என்ன விலை கொடுத்தாவது அந்தக் கனவை அடைந்தே தீருவது என்று மோசடி செய்யும் மாணவர்கள், பெற்றோர்கள் மறுபுறம்.
அதேசமயம், நீட் தேர்வு மட்டும்தான் இதுபோன்ற அழுத்தங்களுக்கு வழிவகுக்கிறது என்றில்லை. பொதுவாகவே, இங்கு தேர்வுகள் என்றாலே அது மனப்பாடத் திறனுக்கு வைக்கப்படும் சோதனை எனும் அளவில்தான் இருக்கிறது - அது அரசுப் பள்ளி என்றாலும் சரி, தனியார் பள்ளி என்றாலும் சரி!

மனப்பாடத்துக்கு முக்கியத்துவம்

x