சீன அதிபருக்கு சிறுமுகை பட்டு- நெகிழ்ச்சியில் நெசவாளர்கள்


கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் மாமல்லபுரம் வருகை ஒட்டுமொத்தத் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்திருக்கும் நிலையில், சிறுமுகை பகுதி கைத்தறி நெசவாளர்கள் மற்றவர்களைவிட ஒரு படி அதிக மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள், உலகத்துக்கே பட்டுத் துணியை அறிமுகப்படுத்திய சீன தேசத்தின் அதிபரையே வியக்கவைக்கும் அளவுக்கு, கலைநயத்துடன் பட்டு சால்வையை நெய்து கொடுத்து அசத்தியதே இதற்குக் காரணம்.

சீன அதிபருக்குச் சிறப்பான பரிசை வழங்க வேண்டும் என்று திட்டமிட்ட தமிழக அரசு அதிகாரிகள், அவருக்கு அபூர்வ கைத்தறி சால்வையை அளிக்க முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் தேர்வு செய்தது, கோவை மாவட்டம், சிறுமுகை ராமலிங்க சவுடேஸ்வரி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தைத்தான். ஏற்கெனவே, மோடி சால்வை, ஜெயலலிதா அம்மா சேலை, வள்ளுவர் சேலை, 1,330 குறள்கள் பொறித்த சேலை என்று கலைநயமிக்கப் பட்டுப் படைப்புகளைத் தந்த இந்தக் கூட்டுறவுச் சங்கத்தை, அதிகாரிகள் தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியமில்லை. ஆனால், குறுகிய காலத்திற்குள் அற்புதமான சால்வையை இவர்கள் உருவாக்கித் தந்ததுதான் அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.

இந்தச் சால்வையை வடிவமைத்த சிறுமுகை ராமலிங்க சவுடேஸ்வரி கைத்தறி நெசவாளர் சங்கக் கூட்டுறவு சங்க டிசைனர் தர்மராஜிடம் பேசினேன்.

x