பசுமைப் பட்டாசு என்பதே அபத்தம்!- ஆதங்கப்படும் சூழலியல் ஆர்வலர்கள்


கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

‘பசுமைப் பட்டாசுகளைக் கொளுத்துவோம்! இயற்கையைப் பாதுகாப்போம்!’ இப்படி சமூக வலைதளங்களில் தகவல்கள் பரபரக்கின்றன. ஆனால், பசுமைப் பட்டாசு எனும் பதமே அபத்தம் என்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள்.

“எந்த ரசாயனங்கள் எல்லாம் உயிர்களை வதைக்குமோ அவற்றுக்கெல்லாம் பசுமை முகமூடியை அணிவித்துவிடுகிறார்கள். வரும் காலங்களில் பசுமை அணுகுண்டு அறிமுகம் செய்யப்பட்டாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை” என்று சாடுகிறார் சூழலியல் ஆர்வலரும் கவிஞருமான கோவை சதாசிவம். அவரைச் சந்தித்துப் பேசினேன்.

“டெல்லியில் இரண்டு ஆண்டுகள் முன்பு பட்டாசுகள் வெடித்ததில் ஒரு பகுதியே புகை மண்டலம் சூழ்ந்து மாசுபாடு ஏற்பட்டது. அதைக் காரணம்காட்டி நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் ஒருவர். இப்படியான பாதிப்பு டெல்லியில் ஏற்பட்டது என்பதால் அங்கு பட்டாசு வெடிக்கத் தடை விதித்த நீதிமன்றம், அதையே நாடு முழுக்க உத்தரவாகப் பிறப்பிக்க முடியாது என்று சொல்லிவிட்டது. அதேசமயம், “மாசுபாடு, சூழல்கேடு கருதி, மக்கள் பட்டாசு வெடிப்பதைப் படிப்படியாகக் குறைத்துக்கொள்ள வேண்டும்” என்ற வழிகாட்டுதலையும் வழங்கியது.

x