பெண்ணுக்கு அழகு நகையும் சிகையும் அல்ல- காக்கிச் சட்டைக்குள் ஒரு கருணை உள்ளம்


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

மொத்தக் கேரளமும் அபர்ணா லாவகுமாரை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது. திருச்சூர் மாவட்டம், இறிஞ்சாலக்குடா மகளிர் காவல் நிலையத்தில் மூத்த சிவில் காவல் அதிகாரியாகப் பணிபுரியும் அபர்ணா, நேர்மையானவர்; சமூகத்தின் மீதான அக்கறை கொண்டவர் என்று போற்றப்படுபவர். அண்மையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ‘விக்’ செய்யும் தொண்டு நிறுவனத்துக்குத் தன் தலைமுடியை தானம் செய்திருப்பதன் மூலம், மலையாள மனங்களில் தனியிடம் பிடித்திருக்கிறார்.

காவல் நிலையத்தில் பணியில் இருந்த அபர்ணா லாவகுமாரை ‘காமதேனு’வுக்காகச் சந்தித்தேன். 

நட்பார்ந்த புன்னகையுடன் தன் குடும்பப் பின்னணியைச் சொல்ல ஆரம்பித்தார்.

x