அமமுக கூட்டம்... அர்ச்சனை தினகரனுக்கு!- கலகம் செய்யும் கர்நாடகா புகழேந்தி


கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

“அமமுக அழிந்தே தீரும். அதிமுகவையும், ஆட்சியையும் காப்பாற்றுவதே எங்கள் லட்சியம். அதுதான் சின்னம்மாவின் ஆசை!” இப்படி முழங்கியிருப்பவர் வேறு யாருமல்ல... அமமுகவின் கர்நாடக மாநில செயலாளராக இருக்கும் சாட்சாத் புகழேந்தியே தான்!

கோவையில் அமமுக பேனரில் கூட்டம் போட்டு, அதிமுக ஆட்சிக்கு ஆதரவாக தீர்மானங்கள் போட்டு, தனது விசுவாசிகளைத் திரட்டிவைத்து தினகரனை வசைபாடி தீர்த்திருக்கிறார் புகழேந்தி.

மக்களவைத் தேர்தலில் தினகரனுக்காக சசிகலா தரப்பு ஆயிரம் கோடி ரூபாயை களமிறக்கியதாகவும் அதில் 800 கோடி ரூபாயை அமமுக வேட்பாளர்களுக்குத் தந்துவிட்டு எஞ்சிய தொகையை தினகரனே வைத்துக் கொண்டதாகவும் தேர்தல் சமயத்தில் ஒரு தகவல் சுற்றியது. இதையும் மெய் என்று சொல்லும் அளவுக்கு இருந்தது புகழேந்தியின் மேடைப் பிரகடனம்.

x