நம்மூரா... அசலூரா?- நாங்குநேரியில் காங்கிரஸுக்கு செக் வைக்கும் அதிமுக!


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

இடைத் தேர்தலை எதிர்நோக்கும் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி முழுவதும் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. அக்டோபர் 27-ல், தீபாவளி வரும் நிலையில் - அதற்குச் சில நாட்கள் முன்னதாக - 21-ம் தேதி நடக்கவிருக்கும் இந்தத் தேர்தல், தொகுதி மக்களின் மகிழ்ச்சிக்கு விதை தூவியிருக்கிறது.

 “இன்னும் அஞ்சு பைசா கண்ணுல காட்டல சாமி…” என்று வெளிப்படையாகவே பேசும் வாக்காளர்கள் ஒருபுறம், அவர்களைத் ‘திருப்திப்படுத்தும்’ வியூகங்களுடன் இயங்கிவரும் அரசியல் கட்சிகள் மறுபுறம் என்று ஒரே திருவிழா கோலம்தான்.

இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணனும், காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரனும் களத்தில் நிற்கின்றனர். இரு தரப்புக் கூட்டணிக் கட்சிகளும் வாக்குச் சேகரிப்பில் வரிந்துகட்டிக்கொண்டு வேலை பார்க்கின்றன.

x