இனியும் இழப்பதற்கு ஏதுமில்லை!- அமைதிக்கு ஏங்கும் ஏமன்


சந்தனார்
readers@kamadenu.in

அரேபியத் தீபகற்ப நாடுகளில் ஒன்றான ஏமனில், கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கும் மோதல்கள் முடிவுக்கு வரலாம் எனும் சமிக்ஞைகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன.

ஒரு பக்கம், ஹவுதி படையினர், தங்கள் வசம் இருந்த 200 சொச்சம் போர்க் கைதிகளை விடுவித்திருக் கிறார்கள். ஏமனுக்கான ஐநா சிறப்புத் தூதர் ஏமனுக்கு வந்து, அமைதி முயற்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முனைப்பில் இருக்கிறார். ஏமன் அரசுக்கு ஆதரவாக ஹவுதி படைகளையும் அப்பாவிப் பொதுமக்களையும் குண்டுவீசிக் கொன்று கொண்டிருந்த சவுதி அரேபியா,  “மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்” என்று பேசத் தொடங்கியிருக்கிறது. இதெல்லாம் உண்மையில்சாத்தியமாகுமா? எந்தப் புள்ளியில் தொடங்கியது இந்த மோதல்?

நீண்ட வரலாறு

x