கடந்த வாரம் முழுக்க சமூக வலைதளங்களில் ‘புள்ளிங்கோ’ வாரம்தான். ராஜேந்திர பாலாஜி முதற்கொண்டு, மோடி, ரஜினி, எச்.ராஜா என யாரையும் விட்டுவைக்காமல் எல்லோரையும் ‘புள்ளிங்கோ’ ஆக்கி அழகு பார்த்தார்கள் மீம் கிரியேட்டர்கள். சாதாரணமாக வந்த கானா பாட்டு ‘எங்க புள்ளைங்க எல்லா பயங்கரம், எங்களைப் பார்த்தா தமன்னா மயங்கி உயுந்துரும்’ என்று ஆரம்பித்து எப்படி எப்படியோ போய் ‘புள்ளிங்கோ’ என்ற வார்த்தை வைரல் ஆகிவிட்டது. விஜய்யின் ‘பிகில்’ படத்தில் வரும் வெறித்தனம் பாடலிலும் புள்ளிங்கோ என்ற வார்த்தை இடம்பெற்றிருப்பதால் இன்னும் அதிகமாகப் பிரபலமானது. புள்ளிங்கோ பாடலை இது வரை 4 கோடியே 30 லட்சம் முறை பார்த்திருக்கிறார்கள். இதுவரை “என்னடா தலையில காரக்குழம்ப ஊத்திவச்சிருக்க” என்று கிண்டலடித்தவர்களெல்லாம் அந்தஹேர்ஸ்டைலைப் பார்த்து ரசிக்கும் அளவுக்கு ட்ரெண்டாக்கிவிட்டார்கள் நெட்டிசன்கள்.
அண்ணா பல்கலை பாடத்திட்டத்தில் பகவத் கீதை தேவையற்றது.- ஆடிட்டர் குருமூர்த்தி
யாரோ இவர் ஐடி-ஐ ஹேக் பண்ணிட்டாங்க போல...- தமிழ்
பிக் பாஸ் நிகழ்ச்சியால் கலாச்சாரம் சீரழிகிறது. - அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனம்..!
ஆதலால் தொண்டர்கள் அனைவரும் மெயின் ரோட்டுக்கு வாங்க போராட்டம் நடத்தலாம். - சக்திமான்
ரத்த தானம் செய்ய மக்கள் பெருமளவில் முன்வர வேண்டும். - முதலமைச்சர்