கடனை அடைக்க கருமுட்டையை விற்கும் பெண்கள்!


கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

‘கந்து வட்டியைவிட கொடுமையானதாக மாறியிருக்கிறது ‘மகளிர் குழு’ வட்டி. இதில் சிக்கித்தவிக்கும் பெண்கள், தவறான பாதைக்குச் செல்வதோடு கருமுட்டை விற்பனையிலும் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். பலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்’ - இப்படியொரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்தான் இதற்கு மையம் என்பதால் இதுபற்றி விசாரிக்க அங்கு சென்றிருந்தேன்.

கைத்தறி, விசைத்தறித் தொழில்கள்தான் குமாரபாளைய மக்களின் முக்கிய வாழ்வாதாரம். நெசவுத் தொழிலில் உள்ள பெண்கள்தான் மகளிர் குழு வட்டி எனும் விஷ வலைக்குள் மாட்டியிருக்கிறார்கள். இந்தப் பிரச்சினை தொடர்பாக, செப்டம்பர் 21-ல், இங்குள்ள சின்னப்பம்பாளையம் சமுதாயக் கூடத்தில் அனைத்துப் பொதுநலக் கூட்டமைப்பு என்ற பெயரில் ஆலோசனைக் கூட்டம் நடந்திருக்கிறது. கூட்டத்தில் கலந்துகொண்ட நாமக்கல் மாவட்ட சிஐடியு பஞ்சாலை சங்க துணைச் செயலாளர் சண்முகம், விசைத்தறித் தொழிலாளர் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் ஜே.எஸ். சரவணன், மாநிலக் குழு உறுப்பினர் கே.பாலுசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பெருமாள், 23வது வார்டுதிமுக அமைப்பாளர் கந்தசாமி ஆகியோரைச்சந்தித்துப் பேசினேன்.

“நவீன கந்து வட்டிக் குழு இது. ‘கிராம வெளிச்சம்’, ‘அஜ்ஜீவன்’னு பல பேர்ல ஏகப்பட்ட ஃபைனான்ஸ் கம்பெனிகள் இந்தப் பகுதியில இயங்குது. அதுல ஆயிரக்கணக்கான மகளிர் குழுக்களை ஏற்படுத்தியிருக்காங்க. பத்துப் பெண்கள் உள்ள குழுவுக்கு 2 லட்சம் ரூபாய் கொடுத்தாங்கன்னு வைங்க. முதல்ல அந்த ரொக்கப் பணத்தை மொத்தமா ஒவ்வொரு பெண்ணோட கையிலயும் மாறி, மாறி கொடுக்க வைப்பாங்க. அப்புறம் ஆளாளுக்கு 20 ஆயிரம் ரூபாயா பிரிச்சிக்கணும். இப்படிச் செய்யறதால, ‘நம்ம வாங்கினது 20 ஆயிரம் ரூபாய் இல்ல; 2 லட்சம். அதைக் கூட்டா சேர்ந்து கட்டியாகணும்’ங்கிற மூளைச்சலவை முதல்ல நடந்துடுது. இதுக்கு அசலும் வட்டியும் வசூலிக்கிற விதத்தைப் பார்த்தா தலை சுத்திடும்” என்கிறார் சண்முகம்.

x