தேர்தல் அதிகாரிகள் செய்த கூட்டுக்களவாணித்தனம்!


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

ராதாபுரம் தொகுதியில் ஹாட்ரிக் வெற்றியைக் குவித்தவர் அப்பாவு. சுயேச்சையாக நின்றே 20 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அவர், 2016 சட்டமன்றத் தேர்தலில் வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டார். 3 ஆண்டு சட்டப் போராட்டத்தின் மூலம் இப்போது மறு வாக்கு எண்ணிக்கைக்கான உத்தரவைப் பெற்றுள்ள அவரைப் பேட்டிக்காகத் தொடர்பு கொண்டேன். கொஞ்சும் நெல்லைத் தமிழில் பேசினார். இனி பேட்டி...

இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சி தருகிறதா?

மகிழ்ச்சி இருக்கட்டும் தம்பி. அன்னைக்கு நடந்த அராஜகம் இருக்கு பாருங்க, அதை என்னால மறக்கவே முடியாது. 11 மணி வரைக்கும் ஓட்டு எண்ணிக்க ஒழுங்காத்தான் போச்சி. முத பதினெட்டு ரவுண்டு முடிவுல நான் 1600 ஓட்டு முன்னிலையில இருந்தேன் பாத்துக்கோங்க. மதியம் 12 மணி போல மோடி, ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்னாரு... எல்லாம் தலைகீழாயிடுச்சி. அதுவரைக்கும் ஒவ்வொரு ரவுண்ட் ரிசல்ட்டையும் கரெக்ட்டா டிஸ்பிளே பண்ணிக்கிட்டே இருந்தவங்க, அப்புறம் பம்ம ஆரம்பிச்சாங்க. 19-வது ரவுண்டுல தபால் ஓட்டுல 50 ஓட்டு உதைச்சுது.  “அதெப்படி சார்?”னு நம்மாளுங்க கேட்டதும், அடுத்த மூணு ரவுண்ட் ரிசல்ட்டையும் போர்டுல எழுதிப்போடுறதையே நிப்பாட்டிட்டாங்க. “நீங்க வெளியே போங்க ரிசல்ட் அறிவிக்கப்போறோம்”னு சொன்னாங்க. அந்த மூணு ரவுண்ட் ரிசல்ட்டையும் சொல்லுங்க நான் வெளிய போறேன்னேன். துணை ராணுவப்படையை ஏவி என்னைய குண்டுக்கட்டாத் தூக்கி, கீழ போட்டுச் சமட்டி, வெளியே கொண்டுபோய் போட்டாங்க. அப்புறமா மூணு மணி நேரம் கழிச்சி, 49 ஓட்டுல அதிமுக வேட்பாளர் இன்பதுரை ஜெயிச்சிட்டதா அறிவிச்சிட்டாங்க. அதாவது, மொத 18 ரவுண்ட்ல முக்கிக்கிட்டு இருந்த அதிமுக, கடைசி மூணு ரவுண்டுலேயும் பயங்கர லீடிங்காம். எனக்கு விழுந்ததா முதல்ல சொன்ன 203 தபால் ஓட்டுகளையும் செல்லாதுன்னு பின்னாடி கழிச்சிட்டாங்க. அன்னைக்கு என் கூக்குரலைப் பொருட்படுத்தாம நமட்டுச் சிரிப்போட ஜனநாயகப் படுகொலைய செஞ்ச அத்தனை அதிகாரியும் கூண்டுல ஏறி தப்பை ஒத்துக்கிட்டாங்க பாருங்க. அதுதான் எனக்கு மகிழ்ச்சி.
    
இதை எல்லாம் நீதிமன்றத்துல எப்படி நிரூபிச்சீங்க?

x