என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in
கூட்டணிக் கட்சியான அதிமுக இடைத்தேர்தல் பணிகளில் முழுமூச்சாய் ஈடுபட்டிருக்க, பாஜகவோ ஒரு மாத காலத்துக்கு காந்திய நடைப்பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. இங்கு ஒரு தேர்தல் நடக்கிறது என்பதைப் பொருட்படுத்தாமல், சங்கல்ப பாதயாத்திரை நடத்திக்கொண்டிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை ‘காமதேனு’வுக்காகச் சந்தித்தேன்.
வேலூர் இடைத்தேர்தலின்போதே, தேர்தல் பணிக்கு பாஜகவை அதிமுக அழைக்கவில்லை என்று சர்ச்சை எழுந்தது. இப்போதும் அதே நிலைதானா?
தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வேலூர் சுற்றுவட்டார பாஜகவினர் அங்கு சென்று தேர்தல் பணிகளைச் செய்தனர். அதன் அடுத்த கட்டம்தான் பேச்சாளர்களை அனுப்புவது போன்ற விஷயங்கள். இதில் எந்தெந்த இடத்துக்கு யார் தேவைப்படுகிறார்கள் என்பது பாஜக முடிவுசெய்ய வேண்டிய விஷயம் அல்ல. தேர்தலை யார் நிர்வாகம் செய்கிறார்களோ அவர்கள் முடிவுசெய்ய வேண்டிய விஷயம்.