ஹாட் லீக்ஸ்: இன்னொன்று கேட்டார் - இருந்ததும் போச்சு!


செல்லூரார் சேவை - தேர்வுக்குத் தேவை

மதுரையிலுள்ள பிரபல தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் நடந்த காலாண்டுத் தேர்வில் அமைச்சர் செல்லூர் ராஜூ பற்றி ஒரு கேள்வி. அதுவும் வைகை அணை தண்ணீர் ஆவியாகாமல் இருக்க தெர்மாகோல் கொண்டு மூட முயன்ற அந்த வீரதீரச் செயல் பற்றிய கேள்வியாம். இதுபற்றி செல்லூராருக்குத் தகவல் பறக்க, “முதலமைச்சரே இன்னும் பாடப் புத்தகத்துல இடம் பிடிக்கல, நம்ம பேரு வந்திருக்கு சந்தோஷம் தானப்பா” என்று பாசிட்டீவாகப் பேசினாராம்.

திமுகவிடம் படிக்கணும் - யோசனை திருமா

விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் புகழேந்தி அறிமுகக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, “1989-ல், நானும், புகழேந்தியும் எம்எல்ஏ சீட் கேட்டு தலைமையில் விருப்ப மனு கொடுத்தோம். எனக்கு மட்டும் அப்போது சீட் கிடைத்தது. இப்போது புகழேந்திக்குக் கிடைத்திருக்கிறது” என்றார். இதைத் தொடர்ந்து கடந்த வாரம் நடந்த விசிக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய தொல்.திருமாவளவன், “முப்பது ஆண்டுகளாகக் காத்திருந்ததன் பலன் புகழேந்திக்கு இப்போது கிடைத்திருக்கிறது. இதை உணராமல், நாம் வாங்கும் பத்து சீட்டில் எனக்குச் சீட் கிடைக்கவில்லையே என்று கட்சித் தலைமையை விமர்சிப்பவர்களும் கட்சி மாறுகிறவர்களும் திமுகவிடம் பாடம் படித்துக் கொள்ளவேண்டும்” என்றார்.

x