தி கிரேட் கிரேட்டா- உலகை உலுக்கும் ஒற்றைக் குரல்!


சந்தனார்
readers@kamadenu.in

கடந்த வாரம் அமெரிக்காவையே அதிரவைத்த ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியையும் தாண்டி, உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ஸ்வீடன் சிறுமி கிரேட்டா தன்பர்க்.

நியூயார்க்கில் நடந்த ஐநா பருவநிலை உச்சி மாநாட்டில் மிக முக்கியமான அம்சம் கிரேட்டாவின் உரைதான். செப்டம்பர் 23-ல், நடந்த ஐநா அமர்வில் பேசிய கிரேட்டா, இயற்கையைக் காக்க எழுந்த ஒற்றைக் குரலாக ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.

“உங்கள் வெற்று வார்த்தைகளால், எனது கனவுகளையும் குழந்தைப் பருவத்தையும் களவாடிக்கொண்டீர்கள். எனினும், நான் அதிர்ஷ்டசாலிகளில் ஒருத்திதான். மக்கள் அங்கே துன்புற்றுக்கொண்டிருக்கிறார்கள். மடிந்துகொண்டிருக்கிறார்கள்” என்று நடுங்கும் குரலில் கிரேட்டா ஆற்றிய உரை, உலகத்தையே உலுக்கியிருக்கிறது. “எவ்வளவு துணிச்சல் உங்களுக்கு?” என்று தன் உரையில் நான்கு முறை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்ட கிரேட்டா, பருவநிலை மாற்றம் குறித்த அக்கறை இல்லாத உலகத் தலைவர்களைப் பந்தாடியிருக்கிறார்.

x