மனங்களில் கொலு  விருக்கும் ’கொலு’விருக்கும் மயிலை மூவர்!


பிரேமா நாராயணன்
premaa.narayanan@gmail.com

சென்னை, மந்தைவெளியில் துளசியும் மல்லிகைச் செடிகளுமாய் வரவேற்கிறது அந்த வீட்டின் வாசல். கொலுவுக்காகப் புகழ்பெற்ற உடன்பிறப்புகளைச் சந்திக்க வந்திருக்கும் என்னை வாசலுக்கு வந்து புன்னகையுடன் வரவேற்கிறார்கள் அமர்நாத், சுரேந்திரநாத் மற்றும் அபர்ணா. ‘மயிலாப்பூர் ட்ரையோ’ என்று அழைக்கப்படும் இந்த மூவரும் கொலுவின் எல்லைகளை விஸ்தரித்தவர்கள். புத்தாக்கச் சிந்தனையுடன் புதிய மாற்றங்களுக்கும் வித்திட்டவர்கள்.

அமர்நாத், மாநிலக் கல்லூரியில் பேராசிரியர். சுரேந்திரநாத், விளம்பரத் துறையில் கலை இயக்குநர். அபர்ணா, கணக்குத் தணிக்கையாளர். தனியார் வங்கியில் உயர் பதவியில் இருக்கிறார். மூவரும் ‘ஸ்ரீ சுமுகி ராஜசேகரன் நினைவு அறக்கட்டளை’ என்ற அறக்கட்டளை மூலம், வளர்ந்துவரும் கலைஞர்களுக்கும் பல்வேறு சாதனையாளர்களுக்கும் விருதுகள் வழங்கி ஊக்குவித்து வருகிறார்கள்.

எல்லாம் சரி, கொலுவைப் பெண்கள்தானே கொண்டாடுவார்கள், இரண்டு ஆண்கள் எப்படி இதில் ஈடுபாடு காட்டுகிறார்கள்? நெகிழ்ச்சி தரும் கதை அது.

x