உமா
uma2015scert@gmail.com
ஒரே வளாகத்தில் செயல்படும் அரசு / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றியத் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் கல்விச் செயல்பாடுகளை ஆய்வுசெய்யும் அதிகாரத்தை, அதே வளாகத்தில் செயல்படும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கும் அரசாணை 145 பற்றி, இதற்கு முன்பு பார்த்தோம். ஒருங்கிணைந்த பள்ளி வளாகம் என்பது ஏராளமான நடைமுறைச் சிக்கல்களைக் கொண்டிருக்கிறது என்றும் விவாதித்தோம். இந்தத் தருணத்தில், ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி தொடர்பாகவும் விரிவாக விவாதிக்க வேண்டியிருக்கிறது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், முதலில் எஸ்.எஸ்.ஏ, ஆர்.எம்.எஸ்.ஏ ஆகிய திட்டங்களைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டும்.
எஸ்.எஸ்.ஏ என்றால் என்ன?