விஜய் ஊதிய ‘பிகில்’


தொகுப்பு: தேவா

‘பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய், அட்லி இருவர் பேசிய பேச்சும் செம வைரல். அட்லி காப்பியடிப்பவர், கருப்பு நிறத்தவர் என ஒரு தரப்பு அவரைக் கிண்டல் செய்து வந்ததுக்கெல்லாம் அட்லி பதிலடி கொடுத்தார். அதேபோல் விஜய் வழக்கம்போல சமீபத்திய நாட்டு நடப்புகளைப் பற்றியெல்லாம் கருத்து சொல்ல அதற்கு அதிமுகவினர் பதில் கருத்து சொல்ல விஜய் ஊதிய ‘பிகில்’ சத்தம் அதிகமாகவே கேட்க ஆரம்பித்தது. இதற்கிடையில், விழாவில் விஜய் ஒரு சில தத்துவங்களைப் பட்டிமன்ற பேச்சாளரிடமிருந்து காப்பியடித்துப் பேசியிருக்கிறார் என ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. அட்லிதான் காப்பின்னு பார்த்தா விஜய் அதற்கு மேல் இருக்கிறாரே என்றெல்லாம் சிலர் பதிவிட்டனர். ஆனால், விஜய் ரசிகர்கள் எல்லா கதையும் யாரோ சொன்னதுதான். அதெல்லாம் திருட்டுன்னு கிளம்பிடக்கூடாதுன்னு ஆதரவு அளித்தனர். அதுமட்டுமல்லாமல் விஜய் கேட்டுக்கொண்டபடி, சமுகப் பிரச்சினைகளுக்கு ஹேஷ்டேக்குகளை உருவாக்கி அதை இந்திய அளவில் ட்ரெண்ட்டாக்கி வருகின்றனர். அவற்றில் சில #JusticeForSubasri #KeezhadiTamilCivilization #SaveTheniFromNeytrino.

பேனர் வைத்த ஜெயகோபாலைத் தேடி வருகிறோம்; விரைவில் கைது செய்வோம்.- காவல்துறை
எப்படி... எஸ்.வி.சேகரை கைது செஞ்சீங்களே அதுபோலவா!?- ஷிவானி சிவக்குமார்

இந்தியாவில் தொழில் தொடங்கும் முதலீட்டாளர்களுக்கும், அரசுக்கும் இடையே பாலமாக இருப்பேன்! - பிரதமர் நரேந்திர மோடி

x