ஹாட் லீக்ஸ்: தளபதியும் தலைவலியும்


பலே பாலாஜி... பதிலடி தாகூர்!

மைக்கைப் பார்த்தாலே மடைதிறந்த வெள்ளமாய் பேசித்தள்ளும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சமீபத்தில் ராகுல் காந்தியை வெளிநாட்டுக்காரர் என்று சொன்னார். அதைக் கண்டித்து காங்கிரஸ் எம்பி-யான மாணிக்கம் தாகூர் பேச, அவரைப் பன்னி என்றும், வயிற்றிலேயே சுட வேண்டும் என்றும் போட்டுத் தாக்கினார் பாலாஜி. இதற்கு பதிலடி கொடுத்த தாகூர், "மோடியை டாடியாகக் கொண்ட ராஜேந்திர பாலாஜி" என்றுபேச, இதையடுத்து இருவரும் மாறி மாறி போலீஸில் புகார் கொடுத்தார்கள். "நாடாளுமன்ற உரிமைக்குழுவில் புகார் செய்வேன்" என்றுமாணிக் தாகூர் ஒருபடி மேலாக மிரட்ட, ஒரே பரபரப்பாகிவிட்டது விருதுநகர். இதனிடையே மதுரையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவில் பங்கேற்பதாக இருந்த ராஜேந்திர பாலாஜி அந்த விழாவில் பங்கேற்கவில்லை. “இப்போதைக்கு மதுரைப்பக்கம் போகவேண்டாம்” என மேலிடம் கொடுத்த அட்வைஸால் தான் அண்ணன் பம்மிவிட்டார் என்கிறார்கள்.

தளபதியும் தலைவலியும்

மதுரை மாநகர் மாவட்ட திமுக பொறுப்புக்குழு தலைவரான கோ.தளபதி இன்னமும் அழகிரி பாசத்தில் இருப்பதாக அவரது எதிரிகள் கொளுத்திப் போட்ட நெருப்பே இன்னும் அணையவில்லை. அதற்குள்ளாக அடுத்த சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார்கள். மதுரையில் எம்ஜிஆர் சிலை அருகே தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜெயலலிதாவுக்கு சிலை அமைத்து வருகிறார் அமைச்சர் செல்லூர் ராஜு. இந்த விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கும் தளபதியின் எதிராளிகள், “இவருக்கு கொஞ்சமாச்சும் தைரியம் இருந்திருந்தா ஈரோட்டுல எப்படி ஜெ சிலைக்குப் போட்டியா கலைஞர் சிலையை அந்த மாவட்டச் செயலாளர் வெச்சாரோ அதேமாதிரி இவரும் செஞ்சிருக்க வேண்டாமா?" என்று உசுப்பேற்றுகிறார்கள். இதுபற்றி கேட்டால், “இவங்களுக்கு கலைஞர் மேல எல்லாம் பாசம் கிடையாது. எப்படியாச்சும் என்னைய கவுத்துட்டு அந்த இடத்தைப் பிடிக்கணும்னு துடிக்கிறாங்க தம்பி" என்று கூலாகச் சிரிக்கிறார் தளபதி.
எங்ககிட்ட 20 சி கொடுத்துடுங்கோ...

x