சந்தனார்
readers@kamadenu.in
“காஷ்மீர் எங்கள் ரத்தத்துடன் ஊறியது. காஷ்மீருடனான தொடர்பை இழப்பது என்பது பாகிஸ்தானியர்களால் தாங்கிக்கொள்ளவே முடியாத ஒன்று. இது உலகத்துக்கே தெரியும். தார்மிக ரீதியிலும் அரசியல் ரீதியிலும் ராஜதந்திரரீதியிலும் காஷ்மீரிகளுக்கு எங்கள் ஆதரவு தொடரும்” என்று 2002 ஜனவரியில் பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் பர்வேஸ் முஷரஃப் முழங்கினார்.
இதற்கு, “காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை மீண்டும் நினைவூட்டுகிறோம். என்றென்றைக்கும் அப்படித்தான் இருக்கும். எங்களைப் பொறுத்தவரை, காஷ்மீர் என்பது ஏதோ ஒரு துண்டு நிலம் அல்ல. அது மதச்சார்பின்மையைப் பரிசோதிக்க ஏற்ற ஒரு களம்” என்று 2002 சுதந்திர தின உரையில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் பதிலடி தந்தார்.
காஷ்மீர் விஷயத்தில், இந்தியா – பாகிஸ்தானின் நீடித்த நிலைப்பாட்டை இந்தத் தலைவர்களின் வார்த்தைகள் உணர்த்திவிடும்; காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாகப் பிரித்த மத்திய அரசின் நடவடிக்கையால் பாகிஸ்தான் பதறிக்கொண்டிருப்பதன் காரணத்தையும் சொல்லிவிடும்.