உமா
uma2015scert@gmail.com
‘ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும்’ என்ற தமிழக அரசின் அரசாணைக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள், அரசியல் கட்சிகள், மாணவர் இயக்கங்கள் என அனைத்துத் தரப்பிலும் எதிர்ப்பு உருவாகியிருக்கிறது. 2018-ல் இதே செப்டம்பர் மாதம், 11-ம் வகுப்புக்குப் பொதுத் தேர்வை அறிவித்து அதன் தாக்கங்களே இன்னும் தீராத சூழலில், இப்படி ஒரு அரசாணை வெளியிடப் பட்டிருக்கிறது.
இந்தப் பொதுத் தேர்வுக் கலாச்சாரத்தால், இனிமேல் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும் பல்வேறு பாதிப்புகளைச் சந்திக்கும் என்று கல்வியாளர்கள் கவலையுடன் சுட்டிக்காட்டுகிறார்கள்.
அரசாணை என்ன சொல்கிறது?