என்னால் இப்போது சுதந்திரமாக கருத்துச் சொல்ல முடியாது!- மவுனம்  கலைக்கும் தமிழருவி மணியன்


கே.சோபியா
readers@kamadenu.in

செவ்வாய்க்கிழமை தோறும் மவுனவிரதம் இருக்கிற தமிழருவி மணியன், இப்போது மாதக்கணக்காக மவுனவிரதம் இருக்கிறார் போலும். கேட்டால், “ரஜினி கட்சி தொடங்கும் வரையில் அரசியல் பேசக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்பார். அதெப்படி பேசாமல் இருக்க முடிகிறது... இப்போது என்னதான் செய்கிறார்? - இவற்றையெல்லாம் அறிந்து கொள்வதற்காகத் தமிழருவி மணியனைத் தொடர்புகொண்டேன்.

பரபரப்பாகப் பல்வேறு விஷயங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஆனால், எதைப் பற்றியும் கருத்து சொல்லாமல் இருக்கிறீர்களே. ஏன் இந்த மவுனம்?

நான் காந்திய மக்கள் இயக்கத் தலைவராக இருந்த வரைக்கும் கட்டற்ற சுதந்திரம் இருந்தது. எல்லாவற்றையும் பற்றி கருத்துச் சொல்லிக்கொண்டு இருக்கலாம். இப்போது நாம் ரஜினிகாந்தை முன்னெடுப்பதால், தனியாகக் கருத்துச் சொல்ல முடிவதில்லை. காஷ்மீர் பிரச்சினையில் ரஜினி ஒரு கருத்துச் சொல்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள், எனக்
கொரு மாற்றுக்கருத்து இருந்து அதைச் சொன்னால் சரிப்பட்டு வராது. அதனால்தான், ஊடகங்களில் இருந்து பலர் தொடர்பு கொண்டும்கூட, காஷ்மீர் பிரச்சினை உட்பட பல விஷயங்கள் குறித்து நான் கருத்துச் சொல்லவில்லை. 50 ஆண்டுகளாகச் சுதந்திரமாகக் கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறோம். மனதில் பட்டதைப் பேசியிருக்கிறோம், எழுதியிருக்கிறோம். ஆனால், எதையுமே சாதிக்கவில்லை.

x