மாற்றத்தின் விலை மரணம்!


தொகுப்பு: தேவா

சென்னையில் அதிமுகவினர் வைத்த பேனர் காற்றில் பறந்து விழுந்து விபத்துக்குள்ளாகி இறந்த சுபஸ்ரீயின் மரணம் பேனர்கள் வைப்பதனால் ஏற்படும் இடையூறுகளை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது. இதற்கு முன் பலமுறை பல இடங்களில் பேனர்கள், கட் அவுட்டுகளால் விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. டிராஃபிக் ராமசாமி பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார். ஆனால், நீதிமன்றமே நேரடியாகத் தலையிட்டு பேனர்கள் வைப்பதற்கு தடை விதிக்கும் மாற்றத்தைக் கொண்டுவர சுபயின் கோர மரணமும், மனதை உலுக்கும் வீடியோ ஆதாரமும் தேவைப்படுகிறது. நிச்சயம் வீடியோ மட்டும் பதிவாகாமல் இருந்திருந்தால் இது வெறும் விபத்து செய்தியாகவே முடிந்திருக்கும் என்பதுதான் உண்மை. சுபஸ்ரீயின் மரணம் அரசியல் தலைவர்களையும் சினிமாக்காரர்களையும் பேனர்கள் வைப்பது குறித்து யோசிக்க வைத்திருக்கிறது. ஆனால், வழக்கம் போல பதிவுகளிலும், பகிர்தலிலும் இடம்பெறும் மாற்றமாக மட்டுமே இது முடிந்துவிடக்கூடாது என்பதுதான் பலரின் ஆதங்கம்.

நான் பாஜக ஆதரவாளனா..? வேதனையை வெளிப்படுத்திய ரஜினி. - செய்தி

பாஜக ஆதரவாளர்னு வெளிய சொல்லிக்கிறது எவ்வளவு கேவலமானதுனு ரஜினிக்கு தெரிஞ்சிருக்கு... போட்ரா வெடிய. - தமிழன்டா

x