ஹாட் லீக்ஸ்: ஜெர்க் ஆன ஜக்கி


மகாராஷ்டிரா வழியில் தமிழகம்?

மாநிலத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அலுவல் நடைமுறைகள் மராத்தியிலும் இருக்க வேண்டும் என 2017 டிசம்பர் 5-ம் தேதி மகாராஷ்டிரா அரசு ஒரு உத்தரவு போட்டது. இந்த உத்தரவு இன்றளவும் அங்கே அமலில் இருக்கிறது. அப்படியொரு உத்தரவைத் தமிழகத்திலும் பிறப்பித்தாலே இந்தித் திணிப்புப் பிரச்சினையானது பாதியாகக் குறைந்துவிடும் எனத் தமிழறிஞர்கள் சொல்கிறார்கள். இதுகுறித்து திமுக முன்னாள்அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் பேசியபோது, “உரிய நடவடிக்கை எடுப்போம்” என்று சொன்னாராம் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். மாதம் இரண்டாகிவிட்டது; என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று தெரியவில்லை!

ஓவர் ஸ்பீடு ஓபிஎஸ்ஆர்!

‘கங்கா சந்திரமுகியாவே மாறிட்டா’ன்னு சொல்வது போல், பாராளுமன்றத்தில் ‘ஜெய்ஹிந்த்’ போட்டு பாஜகவினரைக் குஷிப்
படுத்திய ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் குமார் கிட்டத்தட்ட பாஜகவின் பிரச்சார பீரங்கியாகவே மாறிவிட்டார். மோடி பிறந்த
நாளை தேனியில் பாஜககாரர்களே அவ்வளவாகக் கண்டுகொள்ளாதபோது, பெரியகுளம் சுப்பிரமணிய சுவாமி கோயில் 
வளாகத்தில் பாஜகவினரை இழுத்துக் கைகோத்து மோடிக்காக மரக்கன்றெல்லாம் நட்டு பிரமாதப்படுத்தி இருக்கிறார் ஓபிஎஸ்ஆர்.

x