இந்த வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்கிறேன்!- குடிநோயாளிகளை மீட்கும் வேம்பு


கரு.முத்து
muthu.k@kamadenu.in

இரா.வேம்பு -  பல குடிநோயாளிகளுக்கு வேம்பாகக் கசக்கும் பெயர். ஆனால், 69 வயதான இவரின் வழிகாட்டுதலுடன், குடிப் பழக்கத்திலிருந்து விடுபட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இந்தப் பெயரே கரும்பாய் இனிக்கிறது. குடிப் பழக்கத்திலிருந்து நூற்றுக்கணக்கானோரை வெளியே கொண்டுவந்த மீட்பராகப் போற்றப்படும் வேம்புவும் ஒரு காலத்தில் குடிநோயாளியாய் இருந்தவர் என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவரான வேம்புவின் இந்தக் கதை, வாழ்க்கையையே இழந்து பரிதவிக்கும் குடிநோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் நற்செய்தி.

தடம் மாற்றிய மது

x