என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in
மதுவை ஒழிப்பதையே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு தொடர்ந்து போராடிவரும் குமரி அனந்தன், தனது 87-வது வயதிலும் அந்த லட்சியத்தை அடைய உழைத்துக்கொண்டிருக்கிறார். மூத்த காங்கிரஸ் தலைவர், காந்தி பேரவை தலைவர் எனும் அடையாளங்களுடன் களைப்பின்றி இயங்கிவரும் குமரி அனந்தன், பூரண மதுவிலக்கு கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செப்டம்பர் 15-ல் உண்ணாவிரதம் இருக்கிறார் என்ற செய்தி வந்து கொண்டிருந்த சமயத்தில் ‘காமதேனு’க்காக அவருடன் ஒரு பேட்டி:
‘படிப்படியாக மதுவிலக்கு’ என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த அதிமுக அதை நோக்கிப் பயணிக்கிறதா?
ஜெயலலிதா இருந்தபோது, மதுக் கடைகள் குறைக்கப்பட்டன. கடைகள் இயங்கும் நேரமும் குறைக்கப்பட்டது. படிப்படியாகக் குறைப்பதாக அதிமுக சொன்னதில், ஒருகட்டம் முடிந்த நிலையில் ஜெயலலிதா இறந்துவிட்டார். அடுத்த கட்ட நடவடிக்கைகளை அவருக்குப் பின் வந்தவர்கள் எடுக்கவில்லை.