உமா
uma2015scert@gmail.com
சமீபகாலமாக, அரசுப் பள்ளிகள் தொடர்பாக ஏதேனும் விவாதங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஒரு புறம் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை குறைவு என்று பேசப்படுகிறது. ஆனால், இந்தக் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளது என்பதைப் பலரும் கவனிக்கத் தவறுகிறார்கள். தன் பங்குக்குத் தமிழகக் கல்வித் துறையும் புதிய மாற்றங்களை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக, ஆகஸ்ட் மாதம் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணை நிலை எண் – 145, நாம் எதிர்பார்த்திராத பல விஷயங்களைக் கொண்டிருக்கிறது.
ஒரே வளாகத்தில் செயல்படும் அரசு / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றியத் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் மாணாக்கரின் நலன், நிர்வாக மேம்பாடு கருதி இப்பள்ளிகளின் கல்விச் செயல்பாடுகளை ஆய்வுசெய்யும் அதிகாரத்தை, அதே வளாகத்தில் செயல்படும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்குவதாக இந்த ஆணை தெரிவிக்கிறது.
செயல்பாடுகள் என்னவாக இருக்கும்?