ஹாட் லீக்ஸ்: நேரத்துக்கு வந்திருக்கலாமே பாஸு!


நேரத்துக்கு வந்திருக்கலாமே பாஸு!

மதுரை - திருச்சி ரயில்வே கோட்டங்களின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் திருச்சியில் நடந்தது. ரயில்வே அதிகாரிகளுடன் மக்களவை, மாநிலங்களவை எம்பி-க்கள் இருபது பேர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்திற்கு வழக்கம் போல ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்தார் திருச்சி எம்பி-யான திருநாவுக்கரசர். இதனால், அவருக்குப் பதிலாக தெற்கு ரயில்வே மதுரை - திருச்சி கோட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் பதவிக்கு திருச்சி சிவாவைத்  தேர்வுசெய்துவிட்டார்களாம். மேக்கப் கலையாமல் வந்த அரசர், இதைக் கேட்டதும் அப்செட்.

“எனக்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிட்டுச் செஞ்சிருக்கலாமே...”என ஆதங்கப்பட்டவர், “சரி, சிவாவுக்கு பீரியட் இன்னும் ஒருவருஷம்தானே இருக்கு. அதுக்கப்புறம் பாத்துக்கலாம்” என்று சொல்லிவிட்டாராம். நம்ம கட்சி இருக்கிற நிலமையில அப்படித் தாண்ணே அட்ஜெஸ்ட் பண்ணிப் போயிட்டே இருக்கணும்!

அண்ணே அதிமுகவின் அத்திவரதராம்!

x