மோடியின் இந்த அரசு பரிதாபத்துக்குரியது!- போட்டுத் தாக்கும் பாலபிரஜாபதி அடிகளார்


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சிக்காலம் 100 நாட்களைக் கடந்திருக்கும் சூழலில், “இன்றைக்கு நாடு அசாதாரண சூழலில் இருக்கிறது. நடப்பது நல்லாட்சி அல்ல, வல்லாட்சி” என்று சொல்லி அரசியல் அரங்கை அதிரவைக்கிறார் அய்யாவழி சமயத் தலைவர் பாலபிரஜாபதி அடிகளார்.

அய்யா வழியைத் தனி மதமாக்கக் கோரி நீண்டகாலமாகக் குரல் கொடுத்துவருபவர் இவர். சுவாமித்தோப்பு அன்புவனத்தில் ‘காமதேனு’வுக்காக இவரைச் சந்தித்தபோது மத்திய அரசின் நடவடிக்கைகள், பரவிவரும் சாதியம், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடனான மோதல் என்று பல்வேறு விஷயங்களைப் பற்றி மனம் திறந்து பேசினார்.

“ஆட்சியும் அரசும் இல்லாமல் மானுடம் இல்லை. அரசு எப்படி இருக்கணும்னுவைகுண்டசாமி, திருவள்ளுவர், புத்தரெல்லாம் சொல்லியிருக்காங்க. அவங்களோட கருத்துகளில் இருந்து முரண்பட்ட அரசுதான் இப்ப நடக்குது. இதையெல்லாம் பேசினாலே அபாண்டமா எதையாச்சும் கிளப்பிவிடுறாங்க. ஆட்சியாளர்களைவிட அதிகமா இந்தத் தேசத்தை நாங்க நேசிக்கிறோம்.

x