பிரிவை நோக்கி பிரிட்டன் - பிரச்சினை தீருமா... பிரளயம் வெடிக்குமா?


சந்தனார்
readers@kamadenu.in

அக்டோபர் 31. இந்த நாளுக்காக, நகத்தைக் கடித்துக்கொண்டு காத்திருக்கிறது பிரிட்டன். அன்றுதான் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான கடைசி நாள் கெடு.
இரண்டு பிரதமர்களின் பதவியைக் காவு வாங்கியதுடன், பிரிட்டனின் எதிர்காலம் குறித்த நிச்சயமின்மைக்கு வித்திட்டிருக்கும் ‘பிரெக்ஸிட்’ (Brexit), (பிரிட்டன் வெளியேறுவது (British and exit) என்பதன் சுருக்கமே பிரெக்ஸிட்)தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்ஸனின் தலையையும் உருட்டிக்கொண்டிருக்கிறது. பிரெக்ஸிட் பிரிட்டனுக்கு என்ன கொண்டுவரும் என்ற பில்லியன் டாலர் கேள்வியும் விஸ்வரூபமெடுத்திருக்கிறது.

பிரெக்ஸிட் பின்னணி

1973-ல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது பிரிட்டன். அப்போது ஐரோப்பிய பொருளாதாரச் சமூகம் (European Economic Community) என்று ஐரோப்பிய ஒன்றியம் அழைக்கப்பட்டது. அந்த அமைப்பில் நீடிப்பது குறித்து 1975-லேயே ஒரு கருத்தறியும் வாக்
கெடுப்பை பிரிட்டன் நடத்தியது. அந்த அமைப்பிலேயே பிரிட்டன் தொடர வேண்டும் என 67 சதவீதம் பேர் வாக்களித்தனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் 28 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள், உறுப்பு நாடுகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் சென்றுவாழவும், பணிபுரியவும் உரிமை பெற்றவர்கள். ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக பிரிட்டன் இருப்பதன் பலன்கள் இரு தரப்புக்கும் கிடைத்து வந்தன.

x