சாக்பீஸில் ஒரு சாதனை!- சாதித்த தமிழன் சந்தோஷ்குமார்


கே.சோபியா
readers@kamadenu.in

சாக்பீஸால் எழுதலாம், சாக்பீஸிலேயே எழுத முடியுமா? முடியும். அதுவும் 1,330 திருக்குறள்களையும் அதில் எழுத முடியும் என்று சாதித்துக்காட்டியிருக்கிறார் ப்ளஸ் 2 மாணவர் சந்தோஷ்குமார். தமிழகத்தின் கின்னஸ் புத்தகம் என்று அழைக்கப்படும் ‘சோழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ விருது இவரது உழைப்புக்கு அங்கீகாரமாக வழங்கப்பட்டிருக்கிறது.

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள செம்பனூர்தான் இவரது சொந்த ஊர். அது செட்டிநாடு பகுதி என்பதை அங்குள்ள கட்டிடங்களும், கோயில்களும் பறைசாற்றுகின்றன. எளிமையான சந்தோஷ்குமாரின் வீடும் உள்முற்றத்துடன் செட்டிநாடு பாணி அழகுடன் மிளிர்கிறது.

நான் அங்கு சென்றிருந்தபோது, சவாரிக்காகக் கிளம்பிக்கொண்டிருந்தார் ஆட்டோ டிரைவரான சந்தோஷ்குமாரின் தந்தை முருகப்பன். என்னைப் பார்த்ததும் வீட்டுக்குள் சென்று ஒரு பெரிய அட்டைப்பெட்டியைச் சுமக்க முடியாமல் சுமந்துவருகிறார் சந்தோஷ். உள்ளே ஏராளமான சாக்பீஸ்கள்.

x