யூ-டியூபின் குழந்தைக் கவி!- மழலைகளை மகிழ்விக்கும் பாலகிருட்டிணன்


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

அந்த வீடு முழுவதையும் குழந்தைகள் ஆக்கிரமித்திருக்கிறார்கள். அவர்களின் நடுவே அமர்ந்துகொண்டு கம்பீரக் குரலில் குழந்தைப் பாடல்களைப் பாடுகிறார் பாலகிருட்டிணன் வண்ணமுத்து. “இந்தக் குழந்தைகளோட முகபாவனையில இருந்தே என் பாட்டு நல்லா இருக்கா இல்லையான்னு தெரிஞ்சிடும்” என்று சிரித்தபடியே சொல்லும் இவரது பாடல்கள், யூ-டியூபில் ‘ரைம்ஸ்’ பார்க்கும் குட்டீஸ் மத்தியில் பிரபலம்.

பொதுத் துறை வங்கி ஒன்றில் முதுநிலை மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற நெல்லை பாலகிருட்டிணன், குழந்தைகளுக்கான யூ-டியூப் சேனலான ‘இன்ஃபோபெல்’ஸுக்கும் பாடல்கள் எழுதுகிறார்.

“பள்ளி நாட்கள்ல இருந்தே கவிதை எழுதுறதுல எனக்கு ஆர்வம் ஜாஸ்தி. ஆனா, அதைப் பிரசுரிக்க எங்கே, எப்படி அனுப்பணும்னு அப்போ தெரியாது. தலையணைக்குக் கீழே பென்சில் வச்சிருப்பேன். நல்ல கவிதை மனசுல வரும்போது அதைக் குறிச்சு வச்சுக்குவேன். 1981-ல், எட்டயபுரத்துல ஒரு கவியரங்கம் நடந்துச்சு. அதுல கவிபாட 100 கவிஞர்களுக்கு அழைப்பு விடுத்தாங்க. அதுல நானும் ஒருத்தன். வங்கிப் பணிக்கு மத்தியில அந்தக் கவியரங்கத்துக்காக நேரம் ஒதுக்கி எழுத முடியல. அதனால, பஸ்ல போயிட்டு இருக்கும்போதே யோசிச்சு சில கவிதைகளை எழுதினேன்.

x