பார்ப்பது தரம்... படைப்பது சரம்!- அந்தியூர் ரவிச்சந்திரன்


கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

‘மண் சுமந்த மரங்களுக்கு
மரணத்தைக் கொடுத்தோம்...
மனிதனைச் சுமந்த பூமியோ
இன்று மரணப் படுக்கையில்' 
– இந்தக் கவிதை வரிகளைக் கேட்டு கரவொலியால் அதிர்கிறது அந்த அரங்கம்.

கவிதையை வாசித்துவிட்டு மேடையிலிருந்து இறங்கி வருகிறார் கி.ரவிச்சந்திரன். அந்தியூர்க்காரர். சமூக நிகழ்வுகளைத் தரம் பிரித்து கவிதைகளாக வார்த்தெடுக்கும் இவரது தொழில் பட்டுச் சேலைகளைத் தரம் பிரிப்பது. மறுபுறம், வாழ்க்கை ஓட்டத்தில் வந்துவிழும் சிந்தனை களைக் கவிதைச் சரமாய் கோக்கிறார்.

சூழலியல் ஆர்வலரான ரவிச்சந்திரனை அந்தியூர் தவிட்டுப் பாளையத்தில் நடந்த சூழலியல் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தேன். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அவரிடம் பேசினேன். “குடும்பக் கஷ்டம் காரணமா மூணாம் வகுப்போட படிப்பை நிறுத்திட்டு மளிகைக் கடை வேலைக்குப் போயிட்டேன். ஆனாலும் எனக்குள்ள இருந்த வாசிப்பு ஆர்வம் என்னை சும்மா இருக்கவிடல. கையில் கிடைத்ததை எல்லாம் வாசிக்க ஆரம்பிச்சேன். கொஞ்ச நாள்ல மளிகைக் கடைய விட்டுட்டு பட்டு நெசவுத் தொழிலுக்கு வந்துட்டேன்”என்று சொல்லும் ரவிச்சந்திரன், எழுத்துலகத்துக்கு வந்த கதையையும் விரிவாகச் சொல்கிறார்.

x